தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 2-வது நாளாக குவிந்த பட்டதாரிகள்
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 2-வது நாளாக நேற்றும் பட்டதாரிகள் குவிந்தனர்.
புதுக்கோட்டை,
ஜாக்டோ ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கூறியது. எனினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதற்கிடையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்படும். நாளை (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலமாக எந்த இடையூறும் இல்லாமல் பள்ளிகளை திறக்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. தற்போது தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த பணியில் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி பெண்கள் மற்றும் ஆண்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் விண்ணப்பங்கள் வாங்கும் பகுதியில் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் வாங்கப்படமாட்டாது என ஒட்டப்பட்டு இருந்தது.
இதனால் விண்ணப்பிக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேரம் ஆக ஆக பட்டதாரிகளின் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்குங்கள் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சிலர் தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை வாங்கி கொண்டனர். இதனால் நேற்று சிறிது நேரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story