திருப்பூரில் குடியரசு தின விழா


திருப்பூரில் குடியரசு தின விழா
x
தினத்தந்தி 26 Jan 2019 10:00 PM GMT (Updated: 26 Jan 2019 9:29 PM GMT)

திருப்பூரில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட நீதித்துறை சார்பில் குடியரசு தின விழா லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலை நடந்தது. தேசிய கொடியை மாவட்ட நீதிபதி அல்லி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். குடியரசு தினத்தின் சிறப்புகள் குறித்து அவர் விளக்கி கூறினார். விழாவில் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெகநாதன், சார்பு நீதிபதி அழகேசன், மாஜிஸ்திரேட்டுகள் பழனி, நித்யகலா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன ரம்யா, அரசு வக்கீல் கே.என்.சுப்பிரமணியம், வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பழனிசாமி, ராமசாமி, ரவி, மாவட்ட கோர்ட்டு மேலாளர் திருநாவுக்கரசு, கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. தேசிய கொடியை ஆணையாளர் சிவகுமார் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சியில் பொது சுகாதாரப்பிரிவில் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்கள் 31 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மாணவ-மாணவிகளுடன் ஊர்வலமாக சென்று குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், மாநகர் நல அதிகாரி பூபதி, உதவி ஆணையாளர்(கணக்கு) சந்தானநாராயணன், மண்டல உதவி ஆணையாளர்கள் முகமது சபியுல்லா, வாசுகுமார், செல்வநாயகம், கண்ணன், வருவாய் கண்காணிப்பாளர் தங்கவேல்ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல் அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

Next Story