அனுப்பர்பாளையம் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா


அனுப்பர்பாளையம் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா
x
தினத்தந்தி 27 Jan 2019 3:30 AM IST (Updated: 27 Jan 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூரில் அனுப்பர்பாளையம் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளி நிறுவனர் டாக்டர் ஜி.மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், முதல்வருமான சுதா மோகன் முன்னிலைவகித்தார். இதில் ராணுவ ஒருங்கிணைப்புக்குழு முன்னாள் தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவ-மாணவிகள் அணிவகுப்பை ஏற்று கொண்டார். விழாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் முரளதரன், விஜய்ராம், நெருப்பெரிச்சல் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ, பள்ளி நிறுவனர் மோகனுடைய உறவினர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கர்மவீரர் காமராஜர் நல அறக்கட்டளை சார்பில் காமராஜர் விருது பெற்ற பள்ளி நிறுவனர் டாக்டர் மோகன் அனைவராலும் கவுரவிக்கப்பட்டார். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் அணைபுதூர் ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மணிமலர் வரவேற்றார். விழாவில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. முடிவில் நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். விழாவில் 15 வேலம்பாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி பொது மேலாளர் யசோதா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றியதுடன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். பின்னர்கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி அறக்கட்டளை பொருளாளர் சுருதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் பள்ளி மற்றும் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் குடியரசு தினவிழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு ஏ.வி.பி. அறக்கட்டளை கல்வி நிர்வாக உறுப்பினர் பிரதாப் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். விழாவில் பாரத் டையிங் நிறுவன தலைவர் முருகநாதன், ஏ.வி.பி. அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் நடராஜன், தமிழ் பேச்சாளர் அமுதமொழி சுரேஷ் மெய்யப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டனர்.

விழாவையொட்டி மாணவ -மாணவிகளின் பேச்சு போட்டி, நடன போட்டி, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஷாலினி நன்றி கூறினார்.

திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி சங்க தலைவர் ஆனந்த் ராம் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார். ரோட்டரி சங்க செயலாளர் பூபதி, பொருளாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு மாணவ -மாணவிகளின் அணிவகுப்பை ஏற்று கொண்டனர். முடிவில் கல்லூரி நிர்வாக அலுவலர் அசோக்குமார் நன்றி கூறினார்.

பாண்டியன்நகர் சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

விழாவில் பள்ளி தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் ஜெயபால் ஆகியோர் உரையாற்றினார்கள். விழாவையொட்டி பல்வேறுபோட்டிகளும் நடைபெற்றது.

கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஸ்வநாதன், மகேஸ்வரி மற்றும் பள்ளி சார்பில் ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story