வெள்ளிச்சந்தை அருகே தொழிலாளி தற்கொலை போலீஸ் விசாரணை


வெள்ளிச்சந்தை அருகே தொழிலாளி தற்கொலை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 28 Jan 2019 3:45 AM IST (Updated: 27 Jan 2019 8:22 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடியை சேர்ந்தவர் செல்லம் (வயது 65), தொழிலாளி. இவருடைய மனைவி சரோஜா. இவர் வெள்ளிச்சந்தை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

செல்லத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சரோஜா, செல்லத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு தனியாக வசித்து வந்த செல்லத்துக்கு அவருடைய சகோதரி செல்லம்மாள் உணவு வழங்கி வந்தார்.

கடந்த 4 நாட்களுக்கு முன் சரோஜா, கணவர் செல்லத்தின் வீட்டுக்கு வந்து அவருடன் சேர்ந்து வாழத்தொடங்கினார். சம்பவத்தன்று காலை சரோஜா, வியாபாரத்துக்கு சென்று விட்டார். அதன்பிறகு செல்லத்தின் வீட்டுக்கு அவரது சகோதரி சென்றார். அப்போது, செல்லம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த வெள்ளிச்சந்தை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக தொங்கிய செல்லத்தின் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்லம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனாலும் தற்கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story