ஈரோட்டில் நாளை மறுநாள் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் ஏராளமானோர் பங்கேற்க தி.மு.க. கூட்டத்தில் முடிவு


ஈரோட்டில் நாளை மறுநாள் கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் ஏராளமானோர் பங்கேற்க தி.மு.க. கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 27 Jan 2019 11:00 PM GMT (Updated: 27 Jan 2019 4:54 PM GMT)

ஈரோட்டில் வைக்கப்பட்டு உள்ள கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) திறந்து வைக்கிறார். இதில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மணல் மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

அதைத்தொடாந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஈரோடு முனிசிபல் காலனியில் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை திறப்பு விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். இதில் பொதுமக்கள், மாணவ -மாணவிகள், தி.மு.க. மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய பேரூர், வார்டு நிர்வாகிகள், அனைத்து துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, துணைச்செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன், செல்வராஜ், சந்துரு, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டாார்கள்.

Next Story