வேளாங்கண்ணி அருகே வெள்ளையாற்றில் மணல் திட்டுகள் அகற்றப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு
வேளாங்கண்ணி அருகே வெள்ளையாற்றில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூரில் வெள்ளையாறு உள்ளது. இந்த வெள்ளையாற்றின் கரையில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் இறங்கு தளத்திற்கு வேளாங்கண்ணி, செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மீன் இறங்கு தளத்தில் இருந்து மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 400 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து மீன் பிடிக்க செல்வதற்கும், பிடித்த மீனை இறக்குவதற்கும் வெள்ளையாற்றின் வழியாக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வெள்ளையாற்றில் தற்போது மணல் திட்டுகள் ஏற்பட்டு படகுகள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் குறித்த நேரத்தில் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இங்குள்ள மணல் திட்டுகளில் அடிக்கடி மோதுவதால் படகுகள் பழுதடைகிறது.
மேலும் மணல் திட்டுகளில் படகுகள் மோதுவதால் மீனவர்கள் நிலை தடுமாறி கீழே விழுவதால் காயம் அடைகின்றனர். கோடை காலங்களில் மணல் திட்டுகள் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, வெள்ளையாற்றில் உள்ள மணல் திட்டுகளை தூர்வாரி அகற்றியும், கடல் முகத்துவாரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனமீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Tags :
Next Story