கும்பகோணம் அருகே நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த பெண் கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை


கும்பகோணம் அருகே நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த பெண் கற்பழித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Jan 2019 3:45 AM IST (Updated: 28 Jan 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் ஊராட்சி சுடுகாடு அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடல் அருகே ஒரு கைலியும், முத்துமணி மாலையும் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிர்வாண நிலையில் கிடந்ததால் அந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? கொலையாளிகள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக ஆற்றங்கரை பகுதிக்கு வந்தார்? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story