வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்ப்பு பணி


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்ப்பு பணி
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள தால் அதற்காக விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப் பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஆசிரியர் களும் கலந்து கொண்டுள்ள தால் கல்விபணி பாதிக்கப் பட்டுஉள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆகியவை முழு அளவிலும், உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி ஆகியவை அதிகஅளவிலும் செயல்படாமல் முடங்கி போய் உள்ளன.

இந்த நிலை காரணமாக அரசின் உத்தரவின்படி பணிக்கு வராத ஆசிரியர் களுக்கு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 62 சதவீத ஆசிரியர்களுக்கு பணிக்கு வராததற்கான காரணத்தை கேட்டு தனித்தனியாக நோட் டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுஉள்ளது.

உத்தரவு

இந்த விளக்கத்தின் அடிப் படையிலும், உடனடியாக பணிக்கு திரும்பாத ஆசிரியர் களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப் படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக கல்வி பணி பாதிக்காமல் தொடரும் வகையில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சுமார் 6 ஆயிரம் பேர் வேலைக்காக விண்ணப் பித்துள்ளனர். இவர்களின் சான்றிதழ்கள் ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களின் தலைமை யிடங்களில் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் சரி பார்க்கும் பணி நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் அறிஞர் அண்ணா நடு நிலைப்பள்ளியில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஏராள மான ஆண்களும், பெண்களும் தங்களின் ஆசிரியர் கல்வி சான்றிதழ்களுடன் திரளாக வந்திருந்தனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட வைகளை முழுமையாக ஆய்வு செய்து தகுதியானவர் களை தேர்வு செய்தனர். இந்த பணிகளை முதன்மை கல்வி அலுவலர் முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்காலிக ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்று(திங்கட்கிழமை) பணிக்கு ஆசிரியர்கள் திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலி பணி யிடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப் பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருபுறம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தினை தீவிரப் படுத்தி வருகின்றனர். மறுபுறம் இந்த போராட்டத்தினால் கல்வி பணி உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், வேலைநிறுத்த ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

Next Story