திருமானூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் 15 பேர் கைது
திருமானூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழப்பழுவூர்,
மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருமானூர் பஸ் நிலையம் அருகே அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். ரெயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தக்கூடாது. வளங் களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். திருமானூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்டுவரும் மணல் குவாரியை மூட வேண்டும். விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் காரப்பாக்கம் கிராமத்தில் உள்ள மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பையா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம், கலைந்து செல்ல வலியுறுத்தினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சங்கத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் சுப்புகார்த்திக், மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட தலைவர் அருணன், மாவட்ட துணை செயலாளர் குணா, ஒன்றிய தலைவர் மணிகண்டன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அரியலூர்- தஞ்சை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story