அரசு பள்ளிகளை திறந்து ஆசிரியர்கள் பாடம் நடத்த கோரி மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியல்
அரசு பள்ளிகளை திறந்து ஆசிரியர்கள் பாடம் நடத்த கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் உள்ளது. இந்த இரு பள்ளிகளிலும் சுமார் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அனைத்து மாணவர்களும் சத்துணவு சாப்பிட்டு படிக்கின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனமும் இல்லை என்பதால் தொடர்ந்து பள்ளி செயல்படவில்லை.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி திறக்கப்படாததால், பெற்றோர்களையும் அழைத்து கொண்டு பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலைக்கு சென்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ஆசிரியர்களின் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப் படுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறோம். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story