கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது துறையூர் தாலுகா பொன்னுசங்கம் பட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபாலன் தலைமையில் கிராம மக்கள் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எங்கள் ஊரில் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அருகில் இடம் வைத்து இருக்கும் 2 பேர் போலியான ஆவணங்கள் தயாரித்து கோவில் நிலத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து அந்த இடத்தில் வீடு கட்ட முயற்சித்து வருகிறார்கள். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், கோவில் நிலத்திற்கு மட்டும் பட்டா வழங்கி, அவர்கள் போலியாக தயாரித்த ஆவணங்களுக்கு பட்டா வழங்குவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
லால்குடி தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கண்ணன், கதிரேசன் ஆகியோர் அதே ஊரை சேர்ந்த காசிநாதன் என்பவர் முன்விரோதம் காரணமாக தங்களை கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
சமூக ஆர்வலர் தொப்பி செல்லத்துரை கலெக்டரிடம் கொடுத்த மனுவில், திருவெறும்பூர்-கல்லணை சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழக அரசிடம் இலவச வீட்டுமனை பெற்றவர்கள் தற்போது அதனை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இலவசமாக பெற்ற மனையை விற்பவர்கள் மீதும், அதனை வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த மனைகளை யாரும் வாங்க கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், உய்யகொண்டான் உள்ளிட்ட காவிரியின் கிளை வாய்க்கால்கள் மூலம் கரும்பு, வாழை, மஞ்சள் ஆகியவை பயிர் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டால் இந்த வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெற்று வரும் பயிர்கள் வாடிவிடும். எனவே, மே மாதம் வரை மேட்டூர் அணையில் தொடர்ந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர திறந்து விடவேண்டும் என்றும், உடைப்பு ஏற்பட்ட முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் பாதுகாப்புடன் கூடிய தற்காலிக பாதை அமைத்து தரவேண்டும் என கோரியும் மனு கொடுத்தார்.
காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள வேங்கூர், நடராஜபுரம், கூத்தைப்பார், கிளியூர், பத்தாளப்பேட்டை, அரசங்குடி, எல்லக்குடி, கீழ முல்லைக்குடி பகுதி கிராம மக்கள் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என கோரி மாட்டு வண்டி சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Related Tags :
Next Story