விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரிக்கை: சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கக்கோரி கும்பகோணத்தில் விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கும்பகோணம்,
விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். இதுதொடர்பான எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். லோக்பால் சட்டத்தை வலுவானதாகவும், நேர்மையாகவும் அமல்படுத்த வேண்டும். பயிர்க்காப்பீடு திட்டத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சமூக ஆர்வலர் அன்னாஹசாரே மத்திய அரசை கண்டித்து நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கும்பகோணத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய கொடி ஏந்தியபடி கலந்து கொண்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை சாலையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விமல்நாதன், ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கும்பகோணம் வட்ட தலைவர் ஆதிகலிய பெருமான் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story