இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2019 4:15 AM IST (Updated: 30 Jan 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

அரசு மற்றும் பொதுத்துறைகளில் உள்ள காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். ரெயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும். அரசுப்பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56-ஐ ரத்துசெய்திட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகள் உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்டக்குழு உறுப்பினர் கலைச்செல்வி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 

Next Story