வானவில் : சார்ஜ் செய்யும் சுட்டி அட்டை
வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகும் பல கருவிகள் சந்தையில் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக இடம்பெற்றிருக்கிறது கேஸ்டெஸ்க் எனப்படும் இந்த சுட்டி அட்டை ( mouse pad ) சார்ஜர்.
மெல்லிய வடிவத்தில் அகலமாக இருக்கும் இந்த அட்டையில் கியூ.ஆர். தொழில்நுட்பத்தில் இயங்கும் எந்த கருவியையும் சார்ஜ் செய்யலாம்.
நமது ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய இதன் மீது வைத்தால் போதும். எந்த கேபிளையும் இணைக்கத் தேவையில்லை. மூன்று நிற எல்.இ.டி. விளக்கொளியின் மூலம் நமக்கு சைகை செய்கிறது.
சிவப்பு நிறவிளக்கு எரிந்தால் சரியான இடத்தில் வைக்கவில்லை என்று பொருள். நீல நிற விளக்கு எரிந்தால் சார்ஜ் செய்ய தயார் என்று அர்த்தம். பச்சை விளக்கு எரிந்தால் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கிறது என்று புரிய வைக்கிறது.
வழக்கமாக இது போன்று சார்ஜ் செய்யும் கருவிகளில் ஒரு மின்சுருள் ( coil ) வழியாகவே மின்சாரம் வரும். ஆனால் இந்த அட்டையில் மூன்று மின்சுருள்கள் இருப்பதால் அதிவேகமாக சார்ஜ் செய்துவிடும்.
நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த மவுஸ் பேட்.
Related Tags :
Next Story