புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் 35 பேர் கைது
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை,
படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த சாலை மறியலுக்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் துரை ஏசுராஜா, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், ஒன்றிய தலைவர்கள் மோரிஸ் அண்ணாதுரை, தமிழழகன் மற்றும் நிர்வாகிகள் சாமிநாதன், ராஜதுரை, பாலகிருஷ்ணன், செந்தில்குமார், திங்கள்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 35 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story