இறுதி பட்டியல் வெளியீடு: அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு: அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:30 AM IST (Updated: 1 Feb 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்ட மன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் விஜயலட்சுமி நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 804 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 47 ஆயிரத்து 369 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4 லட்சத்து 95 ஆயிரத்து 180 வாக்காளர்கள் உள்ளனர். ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 557 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 970 வாக்காளர்கள் உள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 59 வாக்காளர்கள் இருந்தனர்.

அதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணியில் அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதிகளில் 12 ஆயிரத்து 679 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக அரியலூர் தொகுதியில் ஆயிரத்து 335 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயங்கொண்டம் தொகுதியில் 139 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் தொகுதியில படிவம் 7-ல் வரப்பெற்ற 102 விண்ணப்பங்களில் 102 ஏற்பு செய்யப்பட்டுள்ளது. படிவம் 8-ல் வரப்பெற்ற 885 விண்ணப்பங்களில் 772 ஏற்பும், 113 தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. படிவம் 8 ஏ-ல் வரப்பெற்ற 369 விண்ணப்பங்களில் 369 ஏற்பு செய்யப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் தொகுதியில் படிவம் 7-ல் வரப்பெற்ற 598 விண்ணப்பங்களில் 598 ஏற்பு செய்யப்பட்டுள்ளது. படிவம் 8-ல் வரப்பெற்ற 694 விண்ணப்பங்களில் 694 ஏற்பு செய்யப்பட்டுள்ளது. படிவம் 8ஏ-ல் வரப்பெற்ற 205 விண்ணப்பங்களில் 205-ம் ஏற்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

Next Story