ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் விளையாட்டு போட்டிகள் நாளை தொடக்கம் அமைச்சர் தகவல்
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை விளையாட்டு போட்டிகள் தொடங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முன்னாள் முதல்- அமைச்சர் மறைந்த ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கரூர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் ஒன்றிய மற்றும் நகர அளவில் விளையாட்டு போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கிரிக்கெட் மற்றும் ஆண் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறுகிறது.கரூர் நகரத்தில் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்திலும், கரூர் ஒன்றியத்தில் மண்மங்கலம் ஆர்.டி.ஓ.அலுவலகம் அருகிலும், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, செல்லாண்டியம்மன் கோவில் அருகிலும், க.பரமத்தி ஒன்றியத்தில் சின்னதாராபுரம், க.பரமத்தி மாரியம்மன் திடலிலும், தாந்தோணி ஒன்றியத்தில் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், புலியூர், வெள்ளியணையிலும், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பஞ்சப்பட்டி மற்றும் கிருஷ்ணராயபுரத்திலும், கடவூர் ஒன்றியத்தில் தரகம்பட்டியிலும், குளித் தலை ஒன்றியத்தில் அய்யர்மலையிலும், தோகைமலை ஒன்றியத்தில் காவல்காரன்பட்டியிலும் நடைபெறுகின்றன.
போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.8 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.6 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பெறும் அணிகள் மாவட்ட அளவிலான நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறும். கிரிக்கெட், கபடி போட்டியில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
பள்ளி மற்றும் பொதுப்பிரிவு சதுரங்க போட்டிகள் 11, 12, 19 வயது ஆகிய பிரிவுகளிலும், பொது மக்கள் பிரிவிலும், வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெறு கின்றன. இந்த போட்டிகள் கரூர் அட்லஸ் கலையரங்கில் நடைபெறுகிறது.
வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மினி மராத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனத்தனியாக நடத்தப்படுகிறது. மொத்தமாக மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகளுக்கு ரூ.40 லட்சம் பரிசுகள் வழங்கப்படுகிறது. போட்டிகளை அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story