களியக்காவிளை அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு அண்ணன், தங்கையை போலீஸ் தேடுகிறது


களியக்காவிளை அருகே கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு அண்ணன், தங்கையை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 2 Feb 2019 4:45 AM IST (Updated: 2 Feb 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிய அண்ணன் மற்றும் தங்கையை போலீஸ் தேடுகிறது.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55), தொழிலாளி. இவருடைய மனைவி மேரி (53). இவரது பக்கத்து வீட்டுக்காரர் பக்தவல்சலம் (63), வக்கீல். இந்த நிலையில் பக்தவல்சலத்துக்கு சொந்தமான மாடு சம்பவத்தன்று சுந்தரத்தின் வாழைகளை தின்றதாக தெரிகிறது. இதனால் பக்தவல்சலத்தை, சுந்தரம் தட்டிக்கேட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த பக்தவல்சலமும், அவருடைய தங்கை அம்பிகா (48) என்பவரும் சேர்ந்து சுந்தரத்தின் வாழைகளை எல்லாம் வெட்டி சாய்த்ததாக தெரிகிறது.

ஆனாலும் ஆத்திரம் தீராத அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுந்தரத்தையும், மேரியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக மேரி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து பக்தவல்சலத்தையும், அம்பிகாவையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டவையாகும்.

Next Story