மின்சார வினியோக உரிமையை தனியார் மயமாக்க கூடாது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


மின்சார வினியோக உரிமையை தனியார் மயமாக்க கூடாது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

மின்சார வினியோக உரிமையை தனியார் மயமாக்க கூடாது என தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி ஜங்ஷனில் எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எச்.எம்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவரும், தமிழ் மாநில பொதுச் செயலாளருமான ராஜாஸ்ரீதர், ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

40 ஆயிரம் தொடக்க நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தில் விபத்தினால் உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

புதிய மின்மசோதாவை தடுத்து, மின்சார வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். மின்வினியோக உரிமையை தனியார் மயமாக்க கூடாது. அம்முயற்சியை தடுக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டை மின்சார வாரியமே ஏற்று நடத்தி மின்வாரியத்தின் செலவை குறைக்க வேண்டும். ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் ஜெயபிரகாஷ், துணை தலைவர்கள் வீராச்சாமி, வரதராஜன், திருச்சி மண்டல செயலாளர் ராஜமாணிக்கம், திருச்சி வட்ட தலைவர் ஆலயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விபத்தில் இறந்த மின்சார வாரிய 3 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. 

Next Story