இறந்து கிடந்த மான் குறித்து வனத்துறையினர் விசாரணை


இறந்து கிடந்த மான் குறித்து வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 4 Feb 2019 4:00 AM IST (Updated: 4 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் காமராஜர் நகர் அருகே சாலையோரத்தில் ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூர் வனப்பகுதியில் மான்கள் வசித்து வருகின்றன. இந்த மான்கள் அவ்வப்போது தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவதும், அப்போது தெரு நாய்கள் துரத்தி சென்று மான்களை கடித்துக்கொல்வதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் காமராஜர் நகர் அருகே சாலையோரத்தில் ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த மானை வனத்துறையினர் மீட்டு, வேப்பந்தட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வெண்பாவூர் வனப்பகுதியில் மானை புதைத்தனர். மேலும் மானின் உடலில் சிறு, சிறு துளை போன்ற காயங்கள் இருந்ததால் யாரேனும் மானை துரத்தி சென்று வேட்டையாட முயன்றுள்ளனரா?, அல்லது தெருநாய்கள் கடித்துள்ளதா? என்ற கோணத்தில் வேப்பந்தட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story