தூத்துக்குடி, கோவில்பட்டியில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


தூத்துக்குடி, கோவில்பட்டியில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 4 Feb 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி,

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அண்ணா உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே இருந்து காய்கறி மார்க்கெட் வரை தி.மு.க.வினர் மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக சென்றனர். அங்கு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தலைமை செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கிழக்கு பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் அழகிரிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அண்ணா உருவப்படத்துக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஏற்பாட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமசந்திரன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன் பின்னர் கோவில் அன்னதான மண்டபத்தில் பொதுவிருந்து நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜன் செய்து இருந்தார். 

Next Story