பயணிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடை உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே பயணிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரெயில் நிலையம் உள்ளது. கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்காக இந்த ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தையொட்டி உள்ள ஒரு கட்டிடத்தில் டிக்கெட் முன்பதிவு கவுண்ட்டர் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுண்ட்டர் ஆகியவை ஒன்றாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் அருகே அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.
மதுபிரியர்களால் தொல்லை
டாஸ்மாக் கடைக்கு வரும் மதுபிரியர்கள் மதுவை வாங்கி கடையையொட்டி சாலையோரம் உள்ள ரெயில்வே இரும்பு தடுப்பில் அமர்ந்தும், டிக்கெட் கவுண்ட்டரின் வாசலில் அமர்ந்தும் மது குடித்து வருகின்றனர். மதுபிரியர்களுக்கென தற்காலிக சுண்டல், பஜ்ஜி, போன்டா கடைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மதுகுடித்து விட்டு போதை தலைக்கு ஏறியதும் அங்கு வரும் பெண் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசி கேலியும், கிண்்டலும் செய்து வருகின்றனர். கடந்த வாரம் குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவர், அவ்வழியாக ரெயிலில் இருந்து இறங்கி சென்ற பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிகழ்ந்துள்ளது.
தள்ளாடும் ரெயில் நிலையம்
மேலும் சிலர் குடிபோதையில், முன்பதிவு மையத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் போடப்பட்டு உள்ள நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு பயணிகளுக்கு தினமும் தொல்லை கொடுத்து வருகின்றனர். ரெயில் நிலைய நடைமேடையிலும் மதுபிரியர்கள் சுதந்திரமாக உலா வருகின்றனர்.
முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் குடிகாரர்களால் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையமும், டிக்கெட் கவுண்ட்டரும் தினமும் தள்ளாடுகிறது என்றே சொல்லலாம்.
இந்த மதுபிரியர்கள் ரெயில் பயணிகளுக்கு மட்டுமன்றி அருகே உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் தொடர்ந்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மதுக்கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைமையில் பொதுமக்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல போராட்டங்கள் நடத்தினார்கள்.
ஆனால் போராட்டம் நடக்கும் சமயங்களில் அங்கு வரும் அதிகாரிகள் டாஸ்மாக் கடை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளிக்கின்றனர். ஆனால் அதன்பிறகு டாஸ்மாக் கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பயணிகளுக்கு, குடியிருப்புவாசிகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Tags :
Next Story