ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி கரியாப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கரியாப்பட்டினம் வருவாய் ஆய்்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார்.
இதில் நாகை மாவட்ட செயலாளர் நாகை மாலி, ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த சரவணமுத்து, பாலசுப்பிரமணியன், விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் உள்பட விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story