சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வினியோகம்


சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 5 Feb 2019 10:30 PM GMT (Updated: 5 Feb 2019 8:44 PM GMT)

பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி அறிவுறுத்தலுக்கு இணங்க ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் ஜெயங்கொண்டம் 4 ரோடு, கடைவீதி, விருத்தாசலம் ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக் கூடாது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. பஸ்சில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. சரக்கு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றிச்செல்லக்கூடாது. வேகத்தை குறைத்து, சாலை விதிகளை மதித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் போலீசார் பலர் கலந்து கொண்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். 

Next Story