தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: 2–வது கட்டமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: 2–வது கட்டமாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
x
தினத்தந்தி 6 Feb 2019 10:00 PM GMT (Updated: 6 Feb 2019 12:33 PM GMT)

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு 2–வது கட்டமாக நேற்று விசாரணை நடத்தியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு 2–வது கட்டமாக நேற்று விசாரணை நடத்தியது.

விசாரணை குழு

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு 4 மண்டல குழுக்களை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி தென்மண்டல விசாரணை குழு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ராமநாதன் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்ட கலெக்டர்கள், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது 17 வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

15 வழக்குகள்

நேற்று 2–வது கட்ட விசாரணை தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. இதில் குழு தலைவர் ராமநாதன் தலைமையில் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்கள் அருளரசு(தூத்துக்குடி), ராஜேஷ் (மதுரை), குழு செயலாளர் கந்தசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 15 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, வழக்கின் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Next Story