முத்தலாக் மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம்


முத்தலாக் மசோதாவை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2019 10:30 PM GMT (Updated: 6 Feb 2019 8:24 PM GMT)

மத்திய அரசு முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இஸ்லாக் பவுன்டேசன் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோட்டைப்பட்டினம்,

மத்திய அரசு முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் இஸ்லாக் பவுன்டேசன் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இஸ்லாக் பவுன்டேசன் தலைவர் ஆசிக் தலைமை தாங்கினார். எழுத்தாளர் மதிமாறன் மற்றும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் கலைமுரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இது குறித்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறுகையில், இஸ்லாமியர்களுக்கு மிகவும் எதிரான முத்தலாக் சட்டத்தை அமல் படுத்தினால் பல குடும்பங்கள் நடு தெருவில் நிற்கும். இந்த சட்டம் முழு வதுமாக பெண் சுதந்திரத்திற்கு எதிரானது. சட்டத்தை மத்திய அரசு, மாநிலங்களவையில் அமல் படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் தற்போது மக்களவையில் சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதனை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இல்லையென்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். இதில் மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் அலி, இந்திய சமூக ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் முகம்மது சாலிகு, தமுமுக ஒன்றிய தலைவர் அஜ்மல் கான், மாநில மீனவர் அணி செயலாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story