திருப்பூரில் ஒப்புகை சீட்டு எந்திரம் செயல்பாடு குறித்த பயிற்சி
திருப்பூரில் ஒப்புகை சீட்டு எந்திரம் செயல்பாடு குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர்,
நாடு முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதுவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அதனுடன் ஒப்புகை சீட்டு எந்திரமும் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த எந்திரம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த எந்திரத்தை அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற தகவல் அதில் பெறப்படும்.
இந்த எந்திரம் குறித்த செயல்பாடுகளை முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு தொகுதிகளிலும் 10 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கான முதல்கட்ட பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு ஒப்புகை சீட்டு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்கள். பயிற்சி எடுத்து கொண்ட அதிகாரிகள் அடுத்த கட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.
Related Tags :
Next Story