கடையநல்லூர் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.16 ஆயிரம்–பொருட்கள் கொள்ளை
கடையநல்லூர் அருகே பட்டப்பகலில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டை உடைத்து ரூ.16 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கடையநல்லூர்,
கடையநல்லூர் அருகே பட்டப்பகலில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டை உடைத்து ரூ.16 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர்கடையநல்லூர் அருகே உள்ள கண்மணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை(வயது58). இவர் பி.எஸ்.என்.எல். ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலையில் வெளியூரில் வசித்து வந்த அவரது மாமியார் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, வெள்ளத்துரை அன்று இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
பணம்–பொருட்கள் கொள்ளைஅப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கம் மற்றும் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசாரிடம் வெள்ளத்துரை புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில்,‘ வெள்ளத்துரை குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள்,பட்டப்பகலில் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேல்விசாரணை நடத்திவருகின்றனர்.
பரபரப்புபட்டப்பகலில் பி.எஸ்.என்.எல். ஊழியர் வீடு புகுந்து பணம்–பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.