ஏரியில் தண்ணீர் இன்றி 300 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு: நிவாரணம் கேட்டு வயலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
ஏரியில் தண்ணீர் இன்றி 300 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய நிவாரணம் கேட்டு வயலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் பெரியஏரி. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் இல்லை. இந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்த 300 ஏக்கர் நெல் சாகுபடி முற்றிலும் பாதிப்படையும் தருவாயில் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று செந்துறை அருகே வயலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
ராயம்புரம் பெரிய ஏரியானது 364 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் உள்ளதாகும். தமிழக அரசு விவசாயிகளுக்கு வண்டல்மண் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்ததால் விவசாயிகள் போதிய அளவு மண் எடுக்க முடியவில்லை. மேலும் அரசு தரப்பில் பாசன ஏரிகள் தூர்வாரப்படும் என அறிவித்து ஏரிகளை முறையாக தூர்வாரப்படவில்லை. 364 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை உடனடியாக தூர்வார வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்கான நிவாரண தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர்- செந்துறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் தாசில்தார் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், உங்களது (விவசாயிகள்) கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- செந்துறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story