மணப்பாறை அருகே நடந்த வக்கீல் கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்


மணப்பாறை அருகே நடந்த வக்கீல் கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 8:20 PM GMT)

மணப்பாறை அருகே நடந்த வக்கீல் கொலை வழக்கில் தேடப்பட்ட 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

திருச்சி,

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்பாண்டி (வயது 30). வக்கீல். இவர் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி தனது அண்ணன் சிலம்பரசன் செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை பற்றி இன்னொரு தரப்பினருடன் பேசுவதற்காக திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு வந்தார். மணப்பாறையில் இருந்து அய்யர்மலை நோக்கி அவர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த ஒரு கும்பல் அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் ஜெகதீஷ் பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தேனி மாவட்டம் போடி நாயக்கனூரை சேர்ந்த பெரியசாமி மகன் மதன்குமார் (26), திண்டுக்கல் எம்.டி.எஸ். காலனியை சேர்ந்த நாகசாமி மகன் முத்துவேல் (26) ஆகிய இருவரும் நேற்று திருச்சி 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு நாகப்பன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story