மாவட்ட செய்திகள்

பாலம் சீரமைப்பு பணிக்காக லாலாபேட்டை ரெயில்வே கேட் திடீர் மூடல் பொதுமக்கள் அவதி + "||" + Railway Cat's sudden shutdown for the bridge rehabilitation works

பாலம் சீரமைப்பு பணிக்காக லாலாபேட்டை ரெயில்வே கேட் திடீர் மூடல் பொதுமக்கள் அவதி

பாலம் சீரமைப்பு பணிக்காக லாலாபேட்டை ரெயில்வே கேட் திடீர் மூடல் பொதுமக்கள் அவதி
பாலம் சீரமைப்புபணி மேற்கொள் வதற்காக லாலாபேட்டை ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
லாலாபேட்டை,

கரூர் மாவட்டத்தில் லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. பிள்ளபாளையம், கள்ளிபள்ளி, திருப்பத்தூர், சிந்தலவாடி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குளித்தலையில் உள்ள உழவர் சந்தைக்கும், பொதுமக்கள் திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களுக்கும் இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும்.


இந்த நிலையில் அந்த ரெயில்வே கேட் அருகே உள்ள சிறிய மேம்பாலத்தில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று அந்த பாலத்தில் உறுதித்தன்மையை சோதித்து பார்க்கும் பணிகள் நடந்தன. இதன் காரணமாக லாலாபேட்டை ரெயில்வே கேட்டை எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று நேற்று காலை 9 மணிக்கு மூடினர். சேலம் மண்டல ரெயில்வே துறை தலைமை பொறியாளர் உத்தரவின்படி திருச்சி கோட்ட பராமரிப்பு இன்ஸ்பெக்டர் மூலம் ரெயில்வே கேட் மூடப்பட்டு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவதி

இதனால் நேற்று அந்த வழியாக வெளியூர்களுக்கு சென்ற பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் லாலாபேட்டை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாயினர். சிலர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்றனர். ஆனால் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. மேலும் சுரங்கப்பாதையின் அருகே வாய்க்கால் ஓடுவதால், அந்த நீர் ஊற்றெடுத்து சுரங்கப்பாதை சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக போக்கு வரத்தை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.

மேலும் லாலாபேட்டை, பிள்ளபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பலர் நடந்து சென்றதை காண முடிந்தது. இதைத்தொடர்ந்து, மாற்று வழியில் போக்குவரத்தை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகம் உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக எரியும் தீ; பொதுமக்கள் அவதி
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 3–வது நாளாக தீ எரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி அவதி அடைந்தனர்.
2. மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. வாணுவம்பேட்டையில் மயான பூமி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மயான பூமி மூடப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க போராட்டம் பொதுமக்கள் கடும் அவதி
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் 4-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
5. நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதம் கிராம மக்கள் அவதி
நீலகண்டபுரம் ரெயில்வே கீழ்ப்பாலம் கட்டும் பணிகள் தாமதமாக நடப்பதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.