மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஹெல்மெட் அணியாததால் கவர்னர் கிரண்பெடி வேதனை


மோட்டார் சைக்கிளில் செல்வோர் ஹெல்மெட் அணியாததால் கவர்னர் கிரண்பெடி வேதனை
x
தினத்தந்தி 7 Feb 2019 9:56 PM GMT (Updated: 7 Feb 2019 9:56 PM GMT)

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாததால் கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி போக்குவரத்து, காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தி படிப்படியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் கடந்த ஆண்டே ஹெல்மெட் அணிய மக்கள் பழக்கப்பட்ட வேளையில் இதில் தலையிட்டு முதல் அமைச்சர் நாராயணசாமி போலீசாருக்கு தவறான அறிவுறுத்தல் வழங்கினார். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இதை தவிர்க்க கட்டாய ஹெல்மெட் சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.

சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படும் இந்த வேளையில் கூட மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதை கவர்னர் கிரண்பெடி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். மாவட்ட தொழில் மையத்தில் நேற்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார். அப்போது கிராமப்புறங்களின் திறன் மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்த நிகழ்ச்சியில் பள்ளி படிப்பினை இடையில் விட்டவர்கள், இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடாத வகையில் பார்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

Next Story