ஊர்க்காவல் படையில் 51 பணிக்கு 6 ஆயிரம் விண்ணப்பம் வனியோகம்


ஊர்க்காவல் படையில் 51 பணிக்கு 6 ஆயிரம் விண்ணப்பம் வனியோகம்
x
தினத்தந்தி 9 Feb 2019 3:45 AM IST (Updated: 8 Feb 2019 7:20 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் 51 பணியிடத்திற்கு 6 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருக்கும் 51 பணியிடங்களுக்கு 38 ஆண்கள், 13 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 7 மற்றும் 8–ந் தேதிகள் விண்ணப்பம் வழங்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி வேலூர் தலைமை தபால் அலுவலகம் அருகில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பம் வினியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு போலீசார் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான இளைஞர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

பின்னர் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் 3 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.

2–வது நாளாக நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் தலைமையில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. நேற்றும் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் மாலை வரையில் 3 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 51 பணியிடத்திற்கு 6 ஆயிரத்து 74 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story