மாவட்ட செய்திகள்

கிராமங்களில் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு + "||" + Move freely available drinking water in villages

கிராமங்களில் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு

கிராமங்களில் குடிநீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேச்சு
கிராமங்களில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டபணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்ப அலுவலரும் தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குனருமான மகேசன் காசிராஜன் தலைமையிலும், கலெக்டர் ஜெயகாந்தன் முன்னலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:– கிராமங்களில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அலுவலர்கள் நகர்ப்பகுதி, பேரூராட்சிப் பகுதி மற்றும் ஊராட்சிப் பகுதிகளுக்கு கள ஆய்வு பணியை அவ்வப்போது மேற்கொண்டு வரவேண்டும்.

குறிப்பாக குடிதண்ணீர் தேவை மற்றும் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்தல் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

மேலும் திட்டப்பணிகள் நடைபெறும் போது தொடர்புடைய அலுவலர்கள் களஆய்வு பணி செய்து, அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மேலும் பணிகள் காலதாமதமாகாமல் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
2. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் தடையில்லை என்பது உள்நாட்டு வணிகர்களை முடக்கும் நடவடிக்கை - விக்கிரமராஜா பேட்டி
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் தடையில்லை என்பது உள்நாட்டு வணிகர்களை முடக்கும் செயல் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
3. உயர்மின் கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ராமநாதபுரத்தில் 2 நாட்களாக நீடித்த மின்தடை; பொதுமக்கள் கடும் அவதி
உயர்மின்கோபுரத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மின்தடை நீடித்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
4. ஜப்பானில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை; தடையை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம்
ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
5. சிவகங்கை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்று தமிழ்நாடு கனிமநிறுவன மேலாண்மை இயக்குனர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.