சேதுபாவாசத்திரம் அருகே சாலையில் பிணமாக கிடந்த முதியவர் கொலையா? போலீசார் விசாரணை
சேதுபாவாசத்திரம் அருகே சாலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலை புதுப்பட்டினம் பகுதியில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றி தெரியவில்லை. அவர் இறந்தது எப்படி? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story