மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் + "||" + Confiscation of plastic materials

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
அரியலூர் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டனர்.
அரியலூர்,

அரியலூர் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பெட்டி கடை, பூக்கடை, காய்கறி கடைகள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மொத்தம் 100 கிலோ பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தினால் கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி பணியாளர்கள் எச்சரித்து சென்றனர்.