திருவள்ளூரில் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்


திருவள்ளூரில் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:30 PM GMT (Updated: 11 Feb 2019 7:15 PM GMT)

திருவள்ளூரில் பொது சுகாதாரத்துறையின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று பொது சுகாதாரத்துறையின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இப்பேரணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்து உடன் சென்றார்.

அப்போது, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தொழுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாலை வழி யாக பேரணியாக சென்ற னர். நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கே.கிருஷ்ணராஜ், மருத்துவ பணிகள் மற்றும் தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் கனிமொழி, திருவள்ளூர் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story