பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தீவிரம்


பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:15 AM IST (Updated: 12 Feb 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதன் மீது 145 தூண்கள் அமைக்கப்பட்டு இரும்பினால் ஆன கர்டர்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடித்து சேதமான இரும்பு கர்டர்கள் அகற்றப்பட்டு புதிய கருடர்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் அருகே உள்ள தூணின் மீது அமைக்கப்பட்டுள்ள சேதமடைந்த பழைய இரும்பு கர்டர் அகற்றப்பட்டு அந்த இடத்தில் புதிய இரும்பு கர்டர் பொருத்தப்பட்டது.

இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:– பாம்பன் ரெயில் பாலத்தில் உப்புக் காற்றால் துருப்பிடித்த பழைய கர்டர்கள் அகற்றப்பட்டு புதிய கர்டர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக 27 கர்டகளை மாற்ற திட்டமிடப்பட்டுஉள்ளது. இதுவரை 17 கர்டர்கள் மாற்றும் பணி முடிவடைந்துள்ளது. விரைவில் அனைத்து கர்டர்களையும் மாற்றும் பணிகள் முழுமையாக நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story