மாவட்ட செய்திகள்

இரு வேறு விபத்து தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் சாவு + "||" + Two people were killed including private school teacher in the accident

இரு வேறு விபத்து தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் சாவு

இரு வேறு விபத்து தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் சாவு
அருப்புக்கோட்டையில் நடந்த வெவ்வேறு விபத்தில் ஆசிரியர் உள்பட 2 பேர் இறந்து போனார்கள்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்பக்கோட்டை சொக்கலிங்கபுரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 51). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மதுரை–தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தொட்டியாங்குளம் விலக்கில் மோட்டார்சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் மோதியது. படுகாயமடைந்த மணிமாறன் தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் மதுரையை சேர்ந்த கார் டிரைவர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அருப்பக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமன்(55). தனியார் திருமண மண்டபத்தில் பணி புரிந்து வந்தார். இவர் தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது அந்த பக்கமாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. படுகாயமடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். டவுன் போலீசார் விசாரணை நடத்தி அவரை பலிகொண்ட வாகனத்தை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது
திருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.
3. டி.என்.பாளையம் அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து; ரூ.3½ லட்சம் எரிந்து நாசம்
டி.என்.பாளையம் அருகே மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்ததோடு, அங்கிருந்த ரூ.3½ லட்சம் எரிந்து நாசம் ஆனது.
4. சென்னிமலை அருகே பரபரப்பு கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது பெரும் விபத்து தவிர்ப்பு
சென்னிமலை அருகே கியாஸ் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது. உடனே தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
5. விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
விபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...