மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை + "||" + Mayiladuthurai-Villupuram Railway to be extended till Nagore Railway Consumers Union

மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை

மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை
மயிலாடுதுறை-விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் என திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் தட்சிணாமூர்்த்தி தலைமையில் நிர்வாகிகள், திருவாரூர் வந்த தென்னக ரெயில்வே பொது மேலாளர்் குல்ஸ்ரஷ்தாவை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-


தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் என்ஜின் மறுதிசைக்கு மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலை, மாலை இரு வேளைகளிலும் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக ரெயில்வே கேட் மூடப்படுவதால் தஞ்சை- நாகை சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பஸ் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே ரெயிலின் என்ஜினை நீடாமங்கலத்தில் மாற்றம் செய்யாமல் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து, திருவாரூர் ரெயில் நிலையத்தில் என்ஜினை மாற்றம் செய்ய வேண்டும். இதேபோல் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு காலை 8 மணிக்கு முன்பாகவும், திருச்சியிலிருந்து திருவாரூருக்கு மாலை 4 மணிக்கு பிறகும் ரெயில் வசதி இல்லாமல் உள்ளது. எனவே இந்த நேரத்தில் ரெயில் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மயிலாடுதுறை- விழுப்புரம் ரெயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவில்- வேளாங்கண்ணி, கொல்லம்- வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை இயக்கப்படும் ரெயிலை தினமும் இயக்க வேண்டும். நாகூர்-கொல்லம் ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். திருவாரூர்் ரெயில் நிலையத்தில் முகப்பு வளைவு ஏற்படுத்தி தர வேண்டும். திருவாரூர் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
2. இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு
கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கோரி ராயனூர் இலங்கை அகதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
3. 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பு பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டரிடம் மனு
திருச்சி அருகே 30 வருடங்களாக கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
4. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 282 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் வெள்ளப்பள்ளம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
5. மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் விஜயலட்சுமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை