டவுன் பஸ் இயக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்


டவுன் பஸ் இயக்கக்கோரி கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2019 4:00 AM IST (Updated: 13 Feb 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

கிராமமக்கள் இரும்பாநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிமளம்,

ஏம்பல் கிராமத்திற்கு, அறந்தாங்கியில் இருந்து தினமும் டவுன் பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஒரு நாளைக்கு ஏம்பலுக்கு அறந்தாங்கியில் இருந்து 4 முறை வரும். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த பஸ் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அறந்தாங்கி மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஏம்பல் அருகே உள்ள இரும்பாநாடு கீழபாகம் கிராமமக்கள் இரும்பாநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏம்பல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் பேசி டவுன் பஸ்சை தொடர்ந்து இயக்குமாறு கூறினார். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். 

Next Story