மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் தங்க தமிழ்செல்வன் பேட்டி + "||" + People will boycott the AIADMK-BJP in the parliamentary election thanga Thamilselvan interview

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் தங்க தமிழ்செல்வன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.–பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் தங்க தமிழ்செல்வன் பேட்டி
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பேரவைச் செயலாளர், பாராளுமன்ற தொகுதி மண்டல பொறுப்பாளர் எஸ்.மாரியப்பன் கென்னடி, அமைப்புச் செயலாளர் ரெத்தினசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் அனைவரையும் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் சோழன்.சித.பழனிச்சாமி, எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மகளிரணி துணைச் செயலாளர் எஸ்.விஜயா, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அன்பரசன், இளைஞர் பாசறை இணைச் செயலாளர் அந்தோணிராஜ், குரு.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இளைஞர் அணி இணைச் செயலாளர் இறகுசேரி முருகன், மாவட்ட பேரவை செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட அவைத்தலைவர் சொக்கநாதன், மாவட்ட துணைச் செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் சக்தி, மாவட்ட இணைச்செயலாளர் தனலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் முருகேஸ்வரி, சரவணன் மற்றும் சிவகங்கை மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், திருமயம், ஆலங்குடி உள்ளிட்ட தொகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், ஒன்றிய, நகர ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தங்கதமிழச்செல்வன் கூறியதாவது:–

மத்திய அரசின் பட்ஜெட்டும், தமிழகத்தின் பட்ஜெட்டும் திட்டங்கள் இல்லாத பட்ஜெட். மத்திய அரசின் பட்ஜெட் தேர்தல் அறிக்கையாகும். தமிழகத்தின் ரூ.4 லட்சம் கோடி கடனை அடைப்பதற்கு தமிழக அரசின் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால் கடைசி நேரத்தில் அ.ம.மு.க. சார்பில் நல்லதொரு கூட்டணி அமையும். மேலும் மத்திய அரசின் பட்ஜெட்டை நாடாளுமன்றத்திலேயே குறை கூறிய துணை சபாநாயகர் தம்பிதுரை மீது அ.தி.மு.க. நடவடிக்கை எடுக்குமா?

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
2. ‘‘நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்’’ தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3. ஜெயலலிதாவின் திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
ஜெயலலிதாவின் திட்டங்களால் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
4. பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று ஈரோடு வருகை நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) ஈரோடு வருகிறார். அவர் நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
5. மக்களை தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டம்
கட்டாய ஹெல்மெட் திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுவதாக கூறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஹெல்மெட்டை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...