மாவட்ட செய்திகள்

காரைக்குடி அருகே மனைவி, மாமனார்–மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் கட்டிட தொழிலாளி கைது + "||" + atack on Wife, father-in-law, mother-in-law worker arrested

காரைக்குடி அருகே மனைவி, மாமனார்–மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் கட்டிட தொழிலாளி கைது

காரைக்குடி அருகே மனைவி, மாமனார்–மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் கட்டிட தொழிலாளி கைது
காரைக்குடி அருகே மனைவி, மாமனார் –மாமியார் மீது உருட்டுக் கட்டையால் தாக்குதல் நடத்திய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனூர் அருகே உள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல். கட்டிட தொழிலாளி. இவருக்கும், காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சண்முகவேல் தினமும் குடித்து விட்டு வந்து ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து சண்முகவேல் அங்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே வாக்குவாதம் முற்றியதில் ராஜேஸ்வரியை சண்முகவேல் உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றார்.

அப்போது ராஜேஸ்வரியின் தாயும், தந்தையும் தடுக்க முயன்றனர். இதில் ராஜேஸ்வரியும், அவரது பெற்றோரும் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராஜேஸ்வரி குன்றக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. துறையூர் அருகே மதுபானம் தயாரித்த வாலிபர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
மதுபானம் தயாரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
2. திருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபர் கொலை சமையல் தொழிலாளி கைது
திருப்பூரில் கட்டையால் அடித்து வாலிபரை கொலை செய்த சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3. விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது
வேளாங்கண்ணியில் விடுதியில் அடைத்து வைத்து 4 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4. நாகை அருகே நடுக்கடலில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது கடற்படையினர் நடவடிக்கை
நாகை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
5. பெருந்துறை அருகே பரபரப்பு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி வாலிபர் கைது
பெருந்துறை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...