மாவட்ட செய்திகள்

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த கர்ப்பிணி கொலையா? போலீசார் விசாரணை + "||" + Pregnant murdered in a well near a whiteness Police investigation

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த கர்ப்பிணி கொலையா? போலீசார் விசாரணை

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த கர்ப்பிணி கொலையா? போலீசார் விசாரணை
வேப்பந்தட்டை அருகே கர்ப்பிணி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26). லாரி கிளனர். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பார்வதிக்கும்(20) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து கர்ப்பமான பார்வதி கடந்த நான்கு மாதங்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்தார். வழக்கம்போல் மணிகண்டன் வேலைக்கு வெளியூர் சென்றுவிட்டார்.


இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த பார்வதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் பார்வதியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தேடியபோது, அங்குள்ள கிணற்றில் பார்வதி பிணமாக மிதந்தார். இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து பார்வதி உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பார்வதியின் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதி தற்கொலை கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் உடலை வீசி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்வதிக்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை அருகே பரிதாபம்: தீயில் கருகி 53 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை
தஞ்சை அருகே தீயில் கருகி 53 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி சாவு; 5 பேர் கைது கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
அய்யம்பேட்டை அருகே கள்ளக்காதலியுடன் தலைமறைவான வாலிபரின் தம்பி இறந்தது தொடர்பான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கு: ராபர்ட் வதேராவிடம் அமலாக்க துறை விசாரணை
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்க துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.
4. புல்வாமா தாக்குதல் விசாரணை: என்.ஐ.ஏ. வசம் வந்தது
புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. இன்று ஏற்றுக் கொண்டது.
5. திருச்சியில் பரிதாபம் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...