மாவட்ட செய்திகள்

சேலத்தில்குண்டர் சட்டத்தில் ரவுடி கைது + "||" + In Salem Rowdy arrested in thugs

சேலத்தில்குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

சேலத்தில்குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
சேலத்தில் முதியவர் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அழகாபுரத்தில் உள்ள பாறைவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 70). இவருடைய மகன் சுப்ரமணி. இவர்களுடைய உறவினர் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடியான பிரபு (37). இவரால் பெருமாள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி பெருமாள் வீட்டிற்கு பிரபு சென்றார். அப்போது அவருக்கும், பெருமாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரபு உலக்கையால் பெருமாளை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 26-ந் தேதி பெருமாள் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரபுவை போலீசார் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரபு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை ஏற்று பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் குண்டர் சட்டத்தில் பெண் கைது
சேலத்தில் வீட்டில் மது பதுக்கி விற்ற பெண் ஒருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. மாவட்டத்தில் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாவட்டத்தில் 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3. தர்மபுரி அருகே ரே‌ஷன் அரிசி கடத்தியவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரி அருகே ரே‌ஷன் அரிசி கடத்தியவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
4. நெல்லை அருகே இரட்டை கொலை வழக்கு: அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை அருகே இரட்டை கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அண்ணன்-தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
5. சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது
சட்ட விரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.