சென்னை சென்டிரல்–நாகர்கோவிலுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம் இன்று முன்பதிவு தொடங்குகிறது
சென்னை சென்டிரல்–நாகர்கோவிலுக்கு சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
சூரமங்கலம்,
கோடை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை சென்டிரல்–நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை சென்டிரல்–நாகர்கோவில் ரெயில் (வண்டி எண்–06007) ஏப்ரல் மாதம் 2, 9, 23–ந் தேதிகளிலும், மே மாதம் 7, 14, 21 மற்றும் 28–ந் தேதிகளிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படுகிறது. அரக்கோணம் இரவு 8.10 மணி, காட்பாடி இரவு 9 மணி, ஜோலார்பேட்டை இரவு 10.10 மணி, சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு ரெயில் வந்தடையும்.
அதன்பிறகு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் நாமக்கல்லுக்கு நள்ளிரவு 1.10 மணி, கரூர் 1.45 மணி, திண்டுக்கல் அதிகாலை 4.10 மணி, மதுரை 5.25 மணி, விருதுநகர் காலை 6.30 மணி, சாத்தூர் 6.52 மணி, கோவில்பட்டி 7.10 மணி, திருநெல்வேலி காலை 9.35 மணி, வள்ளியூர் 10.32 மணி, நாகர்கோவிலுக்கு காலை 11.5 மணிக்கு சென்றடையும்.
அதேபோல், மறுமார்க்கத்தில் நாகர்கோவில்–சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண்–06008) ஏப்ரல் மாதம் 3, 10, 17, 24 மற்றும் மே மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29–ந் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் வள்ளியூர் 5.34 மணி, திருநெல்வேலி மாலை 6.20 மணி, கோவில்பட்டி இரவு 7.36 மணி, சாத்தூர் 7.56 மணி, விருதுநகர் 8.18 மணி, மதுரை இரவு 9.15 மணி, திண்டுக்கல் இரவு 10.30 மணி, கரூர் இரவு 11.30 மணி, நாமக்கல் நள்ளிரவு 12.12 மணி, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நள்ளிரவு 1.10 மணிக்கு வந்து சேரும்.
அதன்பிறகு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், ஜோலார்பேட்டை 3.27 மணி, காட்பாடி அதிகாலை 4.47 மணி, அரக்கோணம் அதிகாலை 5.55 மணி, பெரம்பூர் காலை 6.47 மணி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு காலை 7.20 மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.