தர்மபுரி சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி லட்சார்ச்சனை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தர்மபுரி சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி லட்சார்ச்சனை விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 Feb 2019 11:00 PM GMT (Updated: 15 Feb 2019 4:49 PM GMT)

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் பீஷ்ம ஏகாதசி லட்சார்ச்சனை விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு பூஜையும், பின்னர் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சென்னகேசவ பெருமாளுக்கு அதிகாலை முதல் மாலை வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடுகளும் நடைபெற்றது. மொத்தம் 10 காலம் நடைபெற்ற லட்சார்ச்சனை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத 18 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் 3 டன் மலர்களை கொண்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு புஷ்ப யாக சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோமாதா பூஜையும், 108 சுமங்கலி தரிசன பூஜையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் பச்சை புடவை அணிந்து வழிபாடு நடத்தினார்கள்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் ராமநவமி விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story