தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம்


தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 10:14 PM GMT)

தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

காளையார்கோவில் வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் கென்னடி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க. தகவல் தொடர்பு இணை செயலாளருமான கான்ஸ்டைன் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், மாணவர் அணி அமைப்பாளர் ராஜ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, திருப்பத்தூர் ரவி, சக்திமுருகன், தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்புவனம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மடப்புரம், பூவந்தி, பாப்பாகுடி, ஏனாதி, கணக்கன்குடி, பெத்தானேந்தல், கானூர், மழவராயனேந்தல், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல் ஆகிய இடங்களில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டங்களில் ஒன்றியச் செயலாளர்கள் கடம்பசாமி, வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தனர். சிவகங்கை தொகுதி பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம், மாவட்ட துணைச்செயலாளர் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.

இதில் சாலை, குடிநீர், பஸ் வசதி, கண்மாய் மராமத்து, முதியோர் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை கிராம மக்கள் தெரிவித்திருந்தனர். முதியோர் தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கும், புதிதாக மனு செய்தவர்களுக்கும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருப்புவனம் நகர் செயலாளர் நாகூர்கனி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், பிரகாஷ், மீனவரணி அமைப்பாளர் அண்ணாமலை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவுக்கரசு, ஒன்றிய நிர்வாகிகள் மகேந்திரன், கெங்குராமன், சேதுபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story