‘பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டும்' உத்தவ் தாக்கரே ஆவேசம்


‘பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த வேண்டும் உத்தவ் தாக்கரே ஆவேசம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:45 PM GMT (Updated: 15 Feb 2019 10:34 PM GMT)

பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்த இது சரியான தருணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக தெரிவித்தார்.

மும்பை,

பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்த இது சரியான தருணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆவேசமாக தெரிவித்தார்.

சரியான தருணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த கொடூர சம்பவத்துக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

காஷ்மீரில் துணை ராணுவத்தினர் மீதான பயங்கரவாத தாக்குதல் கடுமையான நடவடிக்கைகள் மூலம் கண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் (மத்திய பா.ஜனதா அரசு) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துல்லிய தாக்குதல் நடத்தினீர்கள். ஆனால் பாகிஸ்தானுக்குள் நுழைந்து துல்லிய தாக்குதல் நடத்துவதற்கு இதுவே சரியான தருணம்.

அரசுக்கு துணையாக...

இந்த பிரச்சினையில் ஒட்டுமொத்த நாடும் மத்திய அரசுக்கு துணையாக நிற்கிறது. காஷ்மீரில் கூட்டணி மற்றும் அரசியல் பிரச்சினை இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானை அங்கு நுழைய அனுமதிக்க கூடாது.

பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். தற்போது நடந்து உள்ள பயங்கரவாத தாக்குதல் பற்றி முன்கூட்டியே உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் நாட்டு மக்களுக்காக என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் உளவுத்துறையின் தோல்வி இருந்தால், இதற்கு பொறுப்புடைய அனைவரும் நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story