தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் - ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுரை


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் - ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுரை
x
தினத்தந்தி 16 Feb 2019 4:28 AM IST (Updated: 16 Feb 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஆலோசனைக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாலை தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான அல்லி உத்தரவின் பேரில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கோகிலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

வருகிற மார்ச் மாதம் 9-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் சிறு குற்ற வழக்குகள், சமாதானமாக முடிக்கக்கூடிய வழக்குகளை அதிக அளவில் எடுத்து தீர்வு காண்பது என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெகநாதன், முதன்மை சார்பு நீதிபதி அழகேசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, மாஜிஸ்திரேட்டு கவியரசன், தாலுகா அளவில் உள்ள மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், போலீஸ் உதவி கமிஷனர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், வக்கீல்கள், திருப்பூர் மாவட்ட கோர்ட்டு மேலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story